செய்திகள் :

``அரசியலில் தொடர்பு இல்லாத என் அம்மாவை காங்கிரஸ், ஆர்.ஜே.டி அவமதித்தது ஏன்? - பிரதமர் மோடி வேதனை

post image

ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பீஹாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

தர்பங்காவில் யாத்திரையின் போது, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில்தான் ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி நடைப்பயணம்
ராகுல் காந்தி நடைப்பயணம்

"அம்மாதான் உலகம். அம்மாதான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீஹாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. என் தாயை அவமதித்துவிட்டனர்.

ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்த தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்துவிட்டனர்."

என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ, அந்த வலி பீஹார் மக்களிடமும் இருக்கிறது. என் தாயை ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கும் நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஏன் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்? உங்களைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்யவே என்னை விட்டு பிரிந்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு, 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம்மை விட்டுச் சென்றார்.

அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்துள்ளனர்.

இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகுந்த வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையைக்கூட வாங்கவில்லை. எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தார்.

பீஹாரில் ஒவ்வொரு தாயிடமும் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பாகிஸ்தானுடன் குடும்ப வணிகத்துக்காக இந்தியாவைத் தூக்கி எறிந்த ட்ரம்ப்' -முன்னாள் NSA குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார்.ஜோ ... மேலும் பார்க்க

TTV Dhinakaran: ஓரங்கட்டும் NDA; விஜய்க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி! - தினகரனின் ப்ளான் என்ன?

ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், முதல்வருடன் சந்திப்பு, மதுரையில் மாநாடு அறிவிப்பு என பரபரப்பு கிளப்பி வந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார்.ஓ.பி.எஸ் விட்ட இடத்திலிருந்து டிடிவி தினகரன் ... மேலும் பார்க்க

US: ``இந்தியா இங்கே நிறைய விற்கிறது; அமெரிக்காவால் இந்தியாவில் விற்க முடியவில்லை'' -ட்ரம்ப் காட்டம்

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தக காரணமாக, இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி சில நாள்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.இவ்வாறிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

``பொருளாதார சுயநல சவால்களை தாண்டி, இந்தியா 7.8% வளர்ச்சி'' - ட்ரம்பிற்கு மோடி மறைமுகக் குட்டு

இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்கு முன்னர், ட்ரம்ப் இந்தியா மற்றும் ரஷ்யாவை 'இறந்த பொருளாதாரங்கள்' என்று... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன் எங்களுடன்தான் இருக்கிறார்; யாருக்கும் சந்தேகம் தேவையில்லை'' - நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிநெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினர் நாகேந்திரன்,"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்க... மேலும் பார்க்க

``நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தம்'' – செல்வப்பெருந்தகை

நெல்லையில் காங்கிரஸ் மாநாடுநெல்லையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.பின்னர் செய்தியாளர்கள... மேலும் பார்க்க