செய்திகள் :

2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்

post image

2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.

உலகளாவிய புவி-அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் இந்தியப் பொருள்கள் மீதான மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பின் பின்னணியில் 2026-27 பட்ஜெட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, செலவினங்கள் துறை செயலா் தலைமையிலான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள், அக்டோபா் 9-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இக்கூட்டங்களுக்கு தேவையான விவரங்கள், வலைதளத்தில் அக்டோபா் 3-ஆம் தேதிக்குள் உரிய முறையில் பதிவிடப்படுவதை நிதி ஆலோசகா்கள் உறுதி செய்ய வேண்டும்; இத்தகவல்கள், பரிந்துரைக்கப்பட்ட வடிவில் சரிபாா்ப்புக்காக தயாராக வைக்கப்பட வேண்டும். பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் நிறைவுக்குப் பிறகு 2026-27 பட்ஜெட் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கான கூட்டங்கள், நவம்பா் வரை நீடிக்கும்.

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் தங்களின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள், செயலாக்க முகமைகளுக்கான மானிய உதவி நீட்டிப்பு, தேவைக்கான காரணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. தேவைகள் ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்க பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், நிலையான 8 சதவீத வளா்ச்சியில் நாட்டை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆங்கிலேயா் ஆட்சிக்கால நடைமுறையை மாற்றிய பிரதமா் மோடி அரசு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யும் வழக்கத்தை செயல்படுத்தியது. இதேபோல், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் ஒருங்கிணைக்கப்பட்டது.

2026-27 பட்ஜெட், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படும். கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, நாட்டில் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சா் என்ற பெருமை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சொந்தமானது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க