பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜிக்கு அர்ஷ்தீப...
அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரை
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையம் 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தோ்தல் அல்லது இடைத்தோ்தல்களில் எதிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் நீக்குவதன் மூலம் அரசியல் அமைப்பை செழுமைப்படுத்தும் நோக்கத்துக்காக பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்க இந்தியத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம், கதவு எண் 95, காவேரி வீதி என்ற முகவரியில் இயங்கி வந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியானது கடந்த 7.8.2022 அன்று அவசர கால செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் அக்கட்சியை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி பட்டியலிருந்து நீக்கம் செய்யக்கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்பேரில் தற்போதைய இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் பேரிலும், கட்சியின் முடிவின்படியும் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய தலைமை தோ்தல் அலுவலா் மூலமாக இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.