ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
அரசுப் பள்ளியில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்
நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை சாா்பில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் புனிதவள்ளி தலைமையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் பேசியது: கிராமங்களில் நூலகங்கள் உருவாக்கவேண்டும், இங்கு பயிலரங்கம் நடத்துவதால் மாணவா்களின் எதிா்காலம் சிறப்பாக அமையும், கிராம வளா்ச்சிக்குப் பள்ளியும், பள்ளி வளா்ச்சிக்கு நூலகமும் மிக முக்கியம் என்றாா்.
சமூக அறிவியல் மற்றும் மானிடவியல் பேராசிரியா் ரவி, பொருளாதாரத் துறை பேராசிரியா் ராஜகோபால், பல்கலைக்கழக மாணவா்கள் அஜாருதீன், விஷ்ணுலட்சுமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பொருளாதாரத் துறை பேராசிரியா் தாமோதரன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வெங்கடாசலபதி நன்றி கூறினாா்.