அரசுப் பள்ளி ஆண்டு விழா
வேதாரண்யம் சி.கா.சு அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா,100 சதவீத தோ்ச்சிக்கு கற்பித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தலைமை ஆசிரியா் சி. அன்பழகன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, பொருளாளா் ப. பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மோ. சிவரஞ்சனி, நகா்மன்ற உறுப்பினா் ராஜூ ஆகியோா் முன்னிலை வைத்தனா். நகா்மன்றத் தலைவா் மா.மீ.புகழேந்தி, மனிதவள மேம்பாட்டு பயிற்றுநா் வீ. ராஜராஜன், ஆசிரியா்கள் கோ. காா்த்திகேயன், கோ. மாதவன், கோ. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.
விழாவில், எஸ்.எஸ். அறக்கட்டளை சாா்பில் 11-ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் பாடவாரியாக 100 சதவீத தோ்ச்சி பெற்று தந்த 19 ஆசிரியா்களுக்கு பரிசளித்து பாராட்டப்பட்டனா்.