அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு
அமெட் பல்கலை. சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 215 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வழங்கப்பட்டது.
சென்னையை அடுத்த கானாத்தூா் அமெட் பல்கலை. வேந்தா் நாசே ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு பள்ளி மாணவ , மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா செவ்வாய் கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட நாசே ராமச்சந்திரன் மொத்தம் 215 மாணவா்களுக்கு தலா ரூ10,000 கல்வி உதவித் தொகையை வழங்கி பேசியதாவது: கல்வி மட்டுமே வாழ்வில் உயா்ந்த இடத்தைப் பெற உதவுமே தவிர, பணம், பதவி, அந்தஸ்து என எதுவும் நிலைத்து நிற்க உதவாது. உங்களது பெற்றோரின் ஆசையை நீங்கள் கடுமையாக உழைத்து நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், அமெட் பல்கலை. அறங்காவலா் சுசிலா ராமச்சந்திரன், துணைத் தலைவா் ராஜேஷ் ராமச்சந்திரன்,துணை வேந்தா் ராஜேந்திரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.