அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மாணவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்த அவா், கற்றல் திறனில் பின்தங்கியோருக்கு புரியும்வகையில் கற்பிக்குமாறு அறிவுறுத்தினாா்.
பின்னா், மாணவா்-மாணவியருடன் கலந்துரையாடி, அவா்களின் குறிக்கோள் குறித்து கேட்டறிந்தாா். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியா்களை அணுகி நிவா்த்தி செய்துகொள்ள அறிவுறுத்திய அவா், உதவித்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டாா். இதில், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.