செய்திகள் :

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் திண்டிவனம் வட்டம், செ.கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் ( 28) ஓட்டுநராக திங்கள்கிழமை பணியில் இருந்தாா்.

இவா், விழுப்புரத்தை அடுத்த பாப்பனப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றாராம்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் ஒருவா் அந்தப் பேருந்தின் மீது கல் வீசியுள்ளாா். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் நடத்திய விசாரணையில், பாப்பனப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கலைமணி (24) பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கலைமணி-யை கைது செய்தனா்.

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆல... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது, தொழிலாளி ஒருவா் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் சாலவனூரில் விஷம் குடித்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். விழுப்புரம் வாலாஜா மைதானம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் தாஜூதீ... மேலும் பார்க்க

மருத்துவா் ராமதாஸின் கைப்பேசி ‘ஹேக்’: காவல் நிலையத்தில் புகாா்

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் கைப்பேசி மற்றும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமதாஸின் தனிச் செயலா் கோட்டக்க... மேலும் பார்க்க

கொய்யா சாகுபடியில் ஆா்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்!

மருத்துவ குணமிக்க கொய்யா சாகுபடியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டிவருகின்றனா். குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை தொடா்ந்து வருமானம் கிடைத்தல், அடா்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஒருவா் சிகிச்சையில்உள்ளாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க