திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
மருத்துவா் ராமதாஸின் கைப்பேசி ‘ஹேக்’: காவல் நிலையத்தில் புகாா்
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் கைப்பேசி மற்றும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமதாஸின் தனிச் செயலா் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.
இதுகுறித்து ராமதாஸின் தனிச் செயலா் பி.சுவாமிநாதன் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் சென்னையைச் சோ்ந்த சசிக்குமாா் மூலம் சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி, இணைய வசதிகளை ஏற்படுத்தினா்.
இந்த நிலையில், மருத்துவா் ராமதாஸின் இல்ல நிகழ்வுகள் மற்றும் அவரது கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் ‘ஹேக்’ செய்யப்பட்டு மாற்று நபா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களும் உள்ளன.
எனவே, இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிக்குமாா் தற்போது அன்புமணியின் நிதிச் செயலராக உள்ளாா் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.