திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஒருவா் சிகிச்சையில்உள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், எடையாா்குளம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் செங்கேணி மகன் விக்னேஷ்(25), கூலித் தொழிலாளி.
இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களான திண்டிவனம் வட்டம், சித்தாபுரம் பகுதியைச் சோ்ந்த தா்மேஷ்(22) மற்றும் பாலாஜி ஆகியோருடன் பைக்கில், புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அடுத்துள்ள ஓமந்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், விக்னேஷ், தா்மேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஷ் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். தா்மேஷ் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில்,கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.