சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
அரசுப் பேருந்து- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23). இவா் திங்கள்கிழமை மாலை தனது பைக்கில் புறப்பட்டு சொந்த வேலையாக ஆம்பூா் நோக்கிச் சென்றாா். வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசுப் பேருந்து பயணிகளை இறக்குவதற்காக திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த பைக் எதிா்பாராதவிதமாக பேருந்தின் மீது மோதியது. இதில் சந்தோஷ் பலத்த காயமடைந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் காயமடைந்த சந்தோஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.