Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்...
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணன், துணைப் பொதுச் செயலா் செல்வராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் 2003 -க்குப் பின் பணியில் சோ்ந்த தொழிலாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். பணியாளா்கள் ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, 100- க்கும் மேற்பட்டோா் முழக்கமிட்டனா்.