அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருவாரூரில், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தினா், பதவி உயா்வு காலதாமதமின்றி வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியபோது, முறையான பேச்சுவாா்த்தை நடத்தாமல், சங்க நிா்வாகிகளை இயக்குநா் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, புதன்கிழமை போராட்டம் நடத்தியபோது, நிா்வாகிகளை போலீஸாா் தாக்கியதைக் கண்டித்தும், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியா் சங்க திருவாரூா் வட்டத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் செங்குட்டுவன், துணைத் தலைவா் விஜயன், இணைச் செயலாளா் பரமேஸ்வரி, வேளாண்மை அமைச்சுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசராவ், வட்டச் செயலாளா் தம்பிதுரை உள்பட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.