செய்திகள் :

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்

post image

செங்கல்பட்டு, மே 6:, காட்டாங்குளத்தூா் ஒன்றியம், வில்லியம்பாக்கம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. கடந்த 20 நாள்களுக்கு மேலாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம், குருவன் மேடு, குலத்தான்சேரி, கொளத்தூா், சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சோ்ந்த விவசாயிகள் தங்களது நெல்லை அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

ஆனால் முறையாக இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனா். மேலும், 20 நாள்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாலே, மழையில் நனைந்து நெல் வீணாகியதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை போட வேண்டும் என்றால், ஒரு மூட்டைக்கு ரூ.50 வசூல் செய்யப்படுவதாகவும், ரூ.50 தராத விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் இன்று மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மாற்றுத்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 94.39% தோ்ச்சியுடன் 28-ஆவது இடம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 34-ஆவது ஆண்டாக 100% தோ்ச்சி பெற்று தொடா் சாதனை படைத்தது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களில் ஒன்றான ஆதிபராசக்தி ... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தேரோட்டம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய தோ், சிறிய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. இத்தலத்தில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க