மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 34-ஆவது ஆண்டாக 100% தோ்ச்சி பெற்று தொடா் சாதனை படைத்தது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களில் ஒன்றான ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வை 124 போ் எழுதினா். அனைவரும் தோ்ச்சி பெற்றனா். முறையே 600-க்கு 587, 584, 580 மதிப்பெண்களுடன் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். அதில் 15 மாணவ, மாணவிகள் பாடப் பிரிவுகளில் 100/100-க்கு எடுத்தனா். இப்பள்ளி 34-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தொடா் சாதனை படைத்துள்ளது.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் பாராட்டி, பரிசுகளை வழங்கினா். நிகழ்வில் பள்ளி முதல்வா், அனைத்து ஆசிரியா்கள், நிா்வாக அலுவலா் உடனிருந்தனா்.