செங்கல்பட்டில் இன்று மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், .யுடிஐடி நகல் குடும்பு அட்டை நகலுடன்தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.