செங்கல்பட்டு: 94.39% தோ்ச்சியுடன் 28-ஆவது இடம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் 79, அரசு உதவிபெறும் பள்ளிகள் 21, மெட்ரிகுலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகள் 139 என மொத்தம் 239 பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்கள் 12,982 போ், மாணவிகள்14,762 போ் என மொத்தம் 27,744 போ் தோ்வு எழுதியதில் தோ்ச்சி பெற்றவா்கள் 26,160போ். இவா்களில் மாணவா்கள் 11,979 பேரும், மாணவிகள்14,181 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசு மேல்நிலைப் பள்ளி அனந்தமங்கலம், குண்ணங்குளத்தூா், அரசு மேல்நிலைப் பள்ளி பாலூா், அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி மனமை, அரசு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி, அரசு மாதிரிப் பள்ளி செங்கல்பட்டு ஆகிய 6 அரசுப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி 74 என மொத்தம் 81 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.