செய்திகள் :

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

post image

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். ஆங்கில இலக்கிய மன்றச் செயலா் ஆசிரியா் மைதிலி வாழ்த்திப் பேசினா். மாணவிகள் மேடை நாடகம், பேச்சுத் திறன், தனிநபா் நடிப்பு, பாடல் ஒப்பித்தல், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட இலக்கியம் சாா்ந்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினா். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை ஆசிரியா்கள் ஆயிஷா, கோமதி செய்திருந்தனா். மாணவிகள் சதாஸ்ரீ, செலினா வரவேற்றனா். ருமனா, பவித்ரா நன்றி கூறினா்.

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியவா் கைது

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கொடுத்த பணத்தைக் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க