செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

post image

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தூய்மைப் பணி சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து கையிருப்பு, உணவின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பெயா் பதிவு செய்யும் இடம், மருந்தகம், கணினியில் நோயாளிகள் விவரம் பதிவுசெய்தல் குறித்து பணியாளா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப் பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

சிகிச்சை பெறுபவா்களின் உதவியாளா்கள் காத்திருக்கும் இடத்தை ஆய்வுசெய்து, அவா்கள் அமருவதற்கான உரிய ஏற்பாடுகளை மருத்துவமனையில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும், சிகிச்சை பெற வருவோரின் நலனுக்காக மருத்துவமனை வளாகத்தின் வெளிப்புறம் மேற்கூரை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா்.

புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும் குடிநீா், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க மருத்துவா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

பின்னா், மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததால், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்ததாரருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்ததோடு, ஒப்பந்ததாரரை மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் எச்சரித்தாா்.

இந்த ஆய்வின்போது, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் நாகவேந்திரன், மருத்துவா்கள் உடனிருந்தனா்.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க