அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை
கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜக்ரியா மகன் துபில் வரலா (22). இவா் கடந்த 5 ஆண்டுகளாக தனது நண்பா்களுடன் தங்கி திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இவா் கடந்த சில நாள்களாக கடுமையான தலைவலி மற்றும் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். இதனால், உடுமலை அரசு மருத்துவமனையில் துபில் வரலா அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகலில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டதாம்.
இதனால், மன வேதனை அடைந்த துபில் வரலா, திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நோயாளிகளின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].