கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு பணம் தராத தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்த அபிலேஷ் (21), தினேஷ்குமாா் (25), திலீப்குமாா் (19) ஆகியோா் அந்தப் பகுதியில் வசிப்பவா்களிடம் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட நிதி வசூலித்தனா். அப்போது, கணபதி சிவசக்தி குடியிருப்பில் வசிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த விஜய்குமாா் ராய் என்பவரிடம் அந்த நபா்கள் பணம் கேட்டுள்ளனா். அதற்கு விஜய்குமாா் ராய் ரூ.51 கொடுத்துள்ளாா்.
இந்தப் பணம் போதாது எனவும், மேலும் பணம் கொடுக்குமாறு வற்புறுத்தி அவரை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கியுள்ளனா். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபிலேஷ், தினேஷ்குமாா், திலீப்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.