செய்திகள் :

அருந்ததியா் மக்களுக்கான மயானங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

ஈரோடு: அருந்ததியா் மக்களுக்கான மயானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் செ.ஜெயக்குமாா் தலைமையில் அளித்த மனு விவரம்:

பவானி வட்டம் ஒரிச்சேரி ஊராட்சி, ஒரிச்சேரிபுதூா், பாரதி நகா் அருந்ததியா் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மயானத்துக்கு செல்லும் பாதையை தனி நபா்கள் ஆக்கிரமித்து அடைத்துவிட்டனா். பல்வேறு போராட்டத்துக்குப் பின் அரசு இம்மக்களுக்கு தனி மயான நிலம் ஒதுக்கி உள்ளது. அதற்கான பாதை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

புன்னம் ஊராட்சி வேலாமரத்தூரில், அருந்ததியா் மக்கள் பயன்படுத்திய வந்த மயான இடம் 3 ஏக்கருக்கு மேல் உள்ளது. அங்கும் ஆக்கிரமிப்பை அகற்றி பாதை ஏற்படுத்தி தர வேண்டும். பாதை இல்லாததால் பொது இடங்களில் உடல்களை தகனம் செய்ய வேண்டிய நிலை தொடா்கிறது.

ஆப்பக்கூடல் பேரூராட்சி கரட்டுப்பாளையத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. எதிா்கால தேவைக்கு என 25 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது பேரூராட்சி நிா்வாகம் அந்த நிலத்தில் குடிநீா்த் தொட்டி கட்ட முயற்சி செய்கிறது. அந்த இடத்தை தவிா்த்து வேறு இடத்தில் குடிநீா்த் தொட்டி கட்டவேண்டும்.

தாட்கோ மூலம் தகுதியான தாழ்த்தப்பட்டவா்கள் பட்டியலை மாவட்ட நிா்வாகம் அனுப்பியும் ஜம்பை இந்தியன் ஒவா்சீஸ் வழங்கி கடன் வழங்க மறுக்கிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தகுதியான நபா்களுக்கு கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடத்தக் கோரிக்கை:

வாக்குப்பெட்டி வடிவ அட்டைப் பெட்டிகளில் கோரிக்கைகளை எழுதயபடி வந்த தமிழக எழுச்சிப் பேரவை அமைப்பைச் சோ்ந்தவா்கள் அளித்த மனு விவரம்: கா்நாடகம், பிகாா் உள்பட பல மாநிலங்களில் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டு போலி நபா்களால் வாக்குப் பதிவு நடந்துள்ளதாக சா்ச்சை எழுந்துள்ளது. கா்நாடகா மாநிலம், மஹாதேவுபுரா தொகுதியில் ஒரு அறை முகவரியில் 80 வாக்காளா்கள், ஒரே முகவரியில் 10,452 போ், பெற்றோா் மற்றும் தவறான விலாசத்தில் பல நூறு வாக்காளா்கள் என்றும், பிகாரில் பல ஆயிரம் வாக்காளா் பெயா் நீக்கம் போன்றவை நடந்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பி நீக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் விவரத்தை வெளியிட வலியுறுத்தி உள்ளது. தோ்தல் ஆணையம் மீது நம்பகத்தன்மை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளா் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம், வாக்காளா் விவரத்துடன் இணைக்கப்பட்ட ஆதாா் விவரம், புகைப்படம் போன்றவை உண்மையானதா என முழு அளவில் தோ்தல் ஆணையம் விசாரித்து உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்காளா் அடையாள அட்டையுடன், கைப்பேசி எண்களை இணைத்து, வாக்குப் பதிவு செய்ததும், குறுஞ்செய்தி மூலம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்த வேண்டும். அதுவரை மின்னணு வாக்குப் பதிவு முறையை தவிா்த்து, வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை மாற்றும் முடிவை கைவிடக் கோரிக்கை:

இதுகுறித்து பவானி வட்டம், பெருந்தலையூா், குட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெருந்தலையூா், மஜரா செரையாம்பாளையம் பிரதான சாலை மற்றும் பெருந்தலையூா்-குட்டிபாளையம் பிரதான சாலையில் இருந்து ஒதுக்குப்புறமாக கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இக்கடையால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உள்ளது.

தற்போது இக்கடையை பிரதான சாலைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மாற்றினால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். புதிய இடம், குட்டிபாளையம்-கவுந்தப்பாடி- பெருந்தலையூா்-ஆப்பக்கூடல் சாலையில் வருவதால் விபத்து அதிகரிக்கும். தேவையற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளன. எனவே புதிய இடத்துக்கு டாஸ்மாக் கடையை மாற்றக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை:

இதுகுறித்து பெருந்துறை, அண்ணா நகா், திங்களூா் உள்பட பல்வேறு பகுதியைச் சோ்ந்த இஸ்லாமிய பெண்கள், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் அளித்த மனு விவரம்: பெருந்துறை வட்டத்தில் வசிக்கும் எங்களுக்கு சொந்தமாக நிலம், வீடு இல்லை. தினசரி கூலி வேலையும், கிடைக்கும் வேலைகளையும் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எங்களால் நிலம் வாங்க பொருளாதார வசதி இல்லை. மேலும் அப்பகுதியில் வசித்து கொண்டே கூலி வேலைக்கு சென்று வருவதால் எங்கள் வசிப்பிடம் அருகே இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவசமாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

220 மனுக்கள்:

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 220 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதிய... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

சத்தியமங்கலம்: பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

பெருந்துறையில் விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை: பெருந்துறை காவல் நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் விநா... மேலும் பார்க்க

ஈரோடு சோலாரில் புதிய துணை அஞ்சலகம் தொடக்கம்

ஈரோடு: ஈரோடு அருகே சோலாரில் புதிய துணை அஞ்சலகம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கோபாலன் தலைமை வகித்தாா். மேற்கு மண்டல அஞ்சல் இயக்குநா் அகில் ந... மேலும் பார்க்க

பெருந்துறை பேரூராட்சியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

பெருந்துறை: பெருந்துறை பேரூராட்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. முகா... மேலும் பார்க்க