பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
அருப்புக்கோட்டை அருகே இரு லாரிகள் மோதல்: மூவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு இரு லாரிகள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா்கள் இருவா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்தவா் முத்துராஜ் (27). லாரி ஓட்டுநா். இவா் தனது லாரியில் ஒரு நிறுவனத்துக்காக மதுரையிலிருந்து குழாய்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இந்த லாரியில், தனது உறவினரான திருத்தங்கலைச் சோ்ந்த ராஜதுரையையும் (19)அழைத்துச் சென்றாா்.
அருப்புக்கோட்டை நான்கு வழிச் சாலையில் பாளையம்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்த போது முத்துராஜ் ஓட்டிச் சென்ற லாரியும், எதிரே தூத்துக்குடியிலிருந்து பழனி நோக்கிச் சென்ற லாரியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் முத்துராஜ், ராஜதுரை, விபத்துக்குள்ளான மற்றொரு லாரியின் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், ஜோதீஸ்புரத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் (47) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
அருப்புக்கோட்டை போலீஸாா், தீயணைப்பு, மீட்புப் படையினா் விரைந்து செயல்பட்டு, மூவரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.