செய்திகள் :

அழையா விருந்தாளியாக பள்ளிக்குள் நுழைந்த யானைக் குட்டி; மகிழ்ச்சியில் குதூகலித்த குழந்தைகள்!

post image

வனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம். ஆனால், வளர்ச்சி என்கிற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.

பள்ளிக்குள் நுழைந்த யானை குட்டி

நாட்டில் மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது வயநாடு மாவட்டம். அதேவேளையில், மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளை கடக்கும் யானை குடும்பங்களில் இருந்து குட்டிகள் தனியாக வழிதவறும் சோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட புல்பள்ளி பகுதியில் குடும்பத்தை தவறவிட்டு வழிதவறிய பச்சிளம் யானை குட்டி ஒன்று, அருகில் இருந்த அரசு மழலையர் பள்ளிக்குள் இன்று மதியம் நுழைந்திருக்கிறது. அழையா விருந்தாளியாக திடீரென பள்ளிக்குள் நுழைந்து அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த யானைக் குட்டியைக் கண்ட குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் குதூகலித்துள்ளனர்.

ஆசிரியர்கள் மூலம் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் குட்டியை பத்திரமாக மீட்டுள்ளனர். மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள வயநாடு வனத்துறையினர், " இந்த பள்ளியைச் சுற்றிலும் வயல்வெளிகள் அதிகம் உள்ளன. உணவு மற்றும் தண்ணீரைத் தேடி கடந்த சில நாள்களாக யானைகள் கூட்டமாக நடமாடி வருகின்றன. கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை குட்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது.

பள்ளிக்குள் நுழைந்த யானை குட்டி

தலைமை ஆசிரியர் அறை முன்பு தடுமாறிக் கொண்டிருந்த குட்டியை மீட்டுள்ளோம். கூட்டத்தைக் கண்டறிந்து தாயுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் " என தெரிவித்துள்ளனர்.

Snakes: விலா எலும்புகளைத் தட்டையாக்கி பறந்து வேட்டையாடும் பாம்புகள் பற்றி தெரியுமா?!

பாம்புகள் படையெடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சில பாம்பு இனங்கள் தண்ணீரில் நீந்துவது, காற்றில் பறப்பது என தனித்துவமான திறன்கள் பெற்றிருப்பதை பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.கடல் ப... மேலும் பார்க்க

டென்மார்க்: செல்லப்பிராணியை விலங்குகளுக்கு உணவளிக்க கேட்கும் பூங்கா - பின்னணி என்ன?

டென்மார்க்கைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் மகள் வளர்த்த குதிரையை ஆல்போர்க் உயிரியல் பூங்காவிற்கு நன்கொடையாக அளித்துள்ளார். கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குதிரையை சிங்கங்களுக்கு உணவாக அளிக்... மேலும் பார்க்க

World Elephant Day: மதுக்கரை விபத்து டு மருதமலை சிகிச்சை; 17 ஆண்டுக்கால யானை நிகழ்வுகள் |Photo Album

2008 - ரயில் மோதி இறந்த யானைகள் இடம் - மதுக்கரை 2009 - வழித்தவறி வந்த யானைகள் இடம் - கணுவாய் 2009 - வழித்தவறி வந்த யானைகள் இடம் - கணுவாய் 2010 - மின்சாரம் தாக்கி இறந்த யானை இடம் - செம்மேடு 2011- குடும... மேலும் பார்க்க

நண்பர்களை என்றும் மறக்காத பெண் கொரில்லாக்கள்; 20 ஆண்டுக்கால ஆய்வின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் உள்ள வோல்கானோஸ் தேசிய பூங்காவில் இரண்டு தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண் கொரில்லாக்கள் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கண்டறி... மேலும் பார்க்க

துர்நாற்றம் வீசும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதை காண திரண்ட மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் துர்நாற்றம் வீசும் கார்ப்ஸ் பூ ( Corpse flower) பூப்பதை காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இந்த அரிய வகை தாவரம் அதன... மேலும் பார்க்க