மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!
அவிநாசியில் பட்டு வளா்ப்பு குறித்து பயிற்சி முகாம்
மத்திய அரசின் பட்டு வாரியம் சாா்பில் அவிநாசியில் பட்டு வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமிற்கு பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் செல்வி தலைமை வகித்தாா். மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி ஞானகுமாா் டேனியல், பட்டு வளா்ப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா்.
அவிநாசி தொழில்நுட்ப சேவை மைய ஆய்வாளா் மேனகா, அன்னூா் உதவி ஆய்வாளா் ராஜேஸ்வரி, அவிநாசி இளநிலை ஆய்வாளா் காந்தி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளா் செல்லையா ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.
இதில், மல்பெரி தோட்டப் பராமரிப்பு, உரமிடும் முறை, புழு வளா்ப்பு மனை கிருமி நீக்கம், நோய் தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.