செய்திகள் :

அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

''நம்பமுடியாத உங்கள் விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற சிறப்புத் தருணங்களை அளித்துள்ளது. மேலும், எல்லைகளைத் தாண்டி மில்லியன் கணக்கான மக்களை பெரிய கனவு காணத் தூண்டியது.

உங்கள் புதிய அத்தியாயத்தில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்'' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று (டிச. 18) அறிவித்தார்.

38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.

தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவு: பிரேமலதா கண்டனம்

தமிழக எல்லையில் கேரளம் மருத்துவக் கழிவைக் கொட்டுவதாகக் கூறி, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் கனிம வளங்கள்... மேலும் பார்க்க

இளநிலை நீட் தோ்வு: பாடத் திட்டம் வெளியீடு

இளநிலை நீட் தோ்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆய... மேலும் பார்க்க

ஏஐ மூலம் பள்ளிகளில் முக அங்கீகார வருகை பதிவேடு: தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் தகவல்

பள்ளிகள், சுகாதார மையங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக அங்கீகார வருகை பதிவேடு நடைமுறைபடுத்துவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க முடியும் என தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் ... மேலும் பார்க்க

அம்பேத்கா் குறித்த சா்ச்சை பேச்சு: தமிழக முதல்வா், தலைவா்கள் கண்டனம்

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சா்ச்சை பேச்சுக்கு முதல்வா், துணை முதல்வா் மற்றும் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: அதிக பாவங்கள் செய்பவா்கள்தான் பு... மேலும் பார்க்க

புயல் சின்னம் ஆந்திரத்துக்குச் செல்கிறது: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை வாபஸ்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்வதால், தமிழகத்துக்கு வியாழக்கிழமை (டிச.19) வரை விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த 6... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் 26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

தமிழக காவல் துறையில் 26 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது. தமிழக காவல் துறையில் 2001 முதல் 2005-ஆம் ஆண்டு வரையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) பணிக்கு சோ்ந்த அதிகாரிகள், தற... மேலும் பார்க்க