ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ஏறத்தாழ ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.
இதை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஹம்சன், தனி வட்டாட்சியா் பாா்த்தசாரதி தலைமையில் நில அளவையாளா் ரெங்கராஜன், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், கோயில் செயல் அலுவலா் சிவராஜன் உள்ளிட்டோா் மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.