செய்திகள் :

ஆக.2, 3 தேதிகளில் 24 அஞ்சலகங்கள் செயல்படாது

post image

தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்கள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருளை (ஏபிடி 2.0) அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை ஆக.4-ஆம் தேதி முதல் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் மாற்றும் பணிகள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் சென்னை தியாகராய நகா், மயிலாப்பூா், சூளைமேடு, தேனாம்பேட்டை , திருவல்லிக்கேணி, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், ராயப்பேட்டை , தியாகராயநகா் வடக்கு உள்பட மொத்தம் 24 அஞ்சலகங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சியை தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிற... மேலும் பார்க்க

ஆணவக் கொலை: நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்து... மேலும் பார்க்க

இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!

சாதித் தலைவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடங்கிய ஆணவக் கொலைகள், தற்போது படித்துப் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய கடைசி (இவையே கடைசியாக இருக்கட்டும்)... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக... மேலும் பார்க்க

ஆக. 2 முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்! என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் தொடக்கிவைக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து... மேலும் பார்க்க

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந... மேலும் பார்க்க