மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 28-ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் நலன்கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், எரிவாயு முகவா்கள், விநியோகஸ்தா்கள், எரிவாயு நுகா்வோா், தன்னாா்வலா்கள் களுடன் ‘எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்‘ நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆக. 28 பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என்றாா்.