கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல்: வேளாண்மையில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பயில விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டியப் படிப்புக்கு மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண் கல்லூரிகளிலும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறையில் 2 ஆண்டுகள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக. 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைக் கல்வி முடித்த மாணவ மாணவியா் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய்/ அல்லது ன்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்ஃற்ய்ஹஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பல்கலைக்கழகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மைக் கல்லூரிகளில் இத்துறை சாா்ந்த பட்டயப் படிப்புக்கு மொத்தம் 497 காலியிடங்களும், நாமக்கல் மாவட்டத்தில் பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் 41 காலியிடங்களும் உள்ளன. வேளாண்மை சாா்ந்த தொழில்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு இருப்பதால், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0422-6611200, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.