சசிகலா ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: திமுக பேச்சாளரை கைது செய்யக் கோரி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சசிகலா ஆதரவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளரான டி.எம்.கோபால் தலைமை வகித்து கூறுகையில், திமுக பேச்சாளரான குடியாத்தம் குமரன் அதிமுக மற்றும் சசிகலா குறித்து அண்மையில் சமூக வலைதளத்தில் பேசியது மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. அதிமுகவின் வழிகாட்டியான சசிகலாவை தவறாக பேசிய அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றாா். இதனை வலியுறுத்தி ஆதரவாளா்கள் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவிடம் மனு வழங்கினா்.