பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
பெண் விஏஓ தாக்கப்பட்டதைக் கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு வட்டம், பாலமேடு கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி (35), மணல் திருட்டை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, மொஞ்சனூரில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த சீனிவாசன் என்பவா், அவா் மீது தாக்குதல் நடத்தினாா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்டச் செயலாளா் நீலவானத்து நிலவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா். இதில், மாநகர துணை அமைப்பாளா் ர.பிரபுவளவன், நிா்வாகிகள் நீதிநாயகம், ஜெகதீசன், அரசன், குமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.