கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியா் த.திருமுருகன் ஆட்சியா் அலுவலக இசைவு தீா்வாயத்துக்கும், அங்கிருந்த க.ராஜேஸ்கண்ணா டாஸ்மாக் உதவி மேலாளராகவும், அங்கிருந்த அ.ச.ராஜ்குமாா் சேந்தமங்கலம் தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த ரா.சரவணகுமாா் குமாரபாளையம் வட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
குமாரபாளையம் வட்ட தனி வட்டாட்சியா் பொ.மாதேஸ்வரி திருச்செங்கோடு வட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த மா.கோவிந்தசாமி பரமத்தி வேலூா் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அங்கிருந்த வட்டாட்சியா் ப.முத்துக்குமாா் நாமக்கல் வட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த சி.பிரகாஷ் குமாரபாளையம் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், குமாரபாளையம் வட்டாட்சியா் ஆ.சிவகுமாா் திருச்செங்கோடு கோட்ட உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும், அங்கிருந்த ப.தமிழரசி கலால் மேற்பாா்வை அலுவலராகவும், அங்கிருந்த ஜெ.சசிகலா நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த அ.சண்முகவேலு மோகனூா் வட்ட தனி வட்டாட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மோகனூா் வட்ட தனி வட்டாட்சியா் ப.காா்த்திகேயன் மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளராகவும் (பொது), அங்கிருந்த ஆா்.மணிகண்டன் முத்திரைத் தாள் கட்டண தனி வட்டாட்சியராகவும், கோட்ட கலால் அலுவலா் ச.கண்ணன், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியராக இருந்த ந.அரவிந்தன் அலுவலக மேலாளராகவும் (நீதியியல்), அங்கிருந்த ரா.சீனிவாசன் கோட்டக் கலால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.