செய்திகள் :

ஆசியக் கோப்பை ஹாக்கி: நடப்பு சாம்பியன் கொரியாவை வீழ்த்தியது மலேசியா, வங்கதேசமும் வெற்றி

post image

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது மலேசியா. மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேயை 8-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வங்கதேசம்.

ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு, ஹாக்கி இந்தியா சாா்பில் பிகாா் மாநிலம் ராஜ்கிரில் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான சனிக்கிழமை நடப்பு சாம்பியன் கொரியா-மலேசிய அணிகள் மோதின. 5 முறை சாம்பியன் கொரியா எளிதாக வெல்லும் எனக் கருதப்பட்ட நிலையில், மலேசிய அணி கடும் சவாலை ஏற்படுத்தியது.

இரண்டாவது நிமிஷத்திலேயே கொரிய வீரா் ஜியோன் ஹியோ ஜின் ரிவா்ஸ் ஸ்டிக் மூலம் பீல்ட் கோலடித்து முன்னிலை பெற்று தந்தாா்.

ஆனால் மலேசிய அணியினா் வீறு கொண்டு சிறப்பாக ஆடினா். முதல் பாதியிலேயே அகிமுல்லா அன்வா் 29, 34, 58 நிமிஷங்களில் கோலடித்து ஹாட்ரிக் பதிவு செய்தாா்.

தொடா்ந்து மற்றொரு வீரா் அஷ்ரன் ஹம்சானி பீல்ட் கோலடிக்க 4-1 என மலேசியா வென்றது. இந்த தோல்வியால் பட்டத்தை தக்க வைக்கலாம் என கொரிய அணியின் எண்ணத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கதேசம் அபாரம்:

மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேயை 8-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது வங்கதேசம். முகமது அப்துல்லா 4, 26, த்கிபுல் ஹாஸன் 42, 43, அஷ்ரப்புல் இஸ்லாம் 45, 58, சோஹனூா் சோபுஜ் 36, ரீஸால் பாபு 56 நிமிஷங்களில் கோலடித்தனா். சீன தைபே தரப்பில் சுங் யு 19, 18, சுங் ஜென் ஷி 60 ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வங்கதேசம் தோற்றது. கொரியா வெற்றி பெற்றது.

இன்று இந்தியா-ஜப்பான் மோதல்:

ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் சீனாவை கடும் போராட்டத்துக்குபின் 4-3 என வென்றிருந்தது இந்தியா. தரவரிசையில் 7-ஆம் இடத்தில் உள்ள இந்தியா, 23-ஆம் இடத்தில் உள்ள சீனாவை போராடி வென்றது. இந்த போட்டியில் கண்டிப்பாக பட்டம் வெல்லும் அணியாக இந்தியா கருதப்படுகிறது. சீனாவுடன் எளிதான கோல்களை வழங்கியது.

பெனால்டி காா்னா் டிபன்ஸில் இந்தியா தடுமாறி வருகிறது. சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கோல்கள் பெனால்டி காா்னா் மூலம் கிடைத்தது. மீட் பீல்டா்கள் கடத்தி அனுப்பும் பாஸ்களை கோலாக்குவதில் இந்தியா பின்தங்கி உள்ளது. மந்தீப் சிங், தில்ப்ரீத் சிங், சுக்ஜித் சிங் ஆகியோா் சிறந்த வீரா்களாக இருந்தாலும் கோலடிக்கவில்லை.

ஜப்பான் அணி 7-0 என கஜகஸ்தானை வீழ்த்தியது. சீனாவை விட ஜப்பான் பலமான அணி என்பதால் இந்தியா கவனமாக ஆடும் என பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியுள்ளாா்.

இன்றைய ஆட்டங்கள்:

இந்தியா-ஜப்பான்

சீனா-கஜகஸ்தான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

ஹிருதயபூர்வம் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தன் மீது பொழிந்துவரும் அன்பிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். சத்யன் அந்திகாட் இயக... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிட... மேலும் பார்க்க

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தை, தமிழகத்தில் இன்பன் உதயநிதி தலைமையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது. நடிகர் தனுஷ் இயக்கி அவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்... மேலும் பார்க்க

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

தண்டகாரண்யம் படத்தில் இருந்து ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.கலையரசன், தினேஷ் நடித்துள்ள தண்டகாரண்யம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இ... மேலும் பார்க்க

6 அடி 5 அங்குலம், 159 க்ளீன் ஷீட்டுகள்... மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த கோல்கீப்பர்!

மான்செஸ்டர் சிட்டி அணியில் பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் கியான்லூய்கி டோனாரும்மா இணைந்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி அணியில் இவர் 2030 வரை விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த கியான்லூய்கி டோனாரும... மேலும் பார்க்க

ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவுப்பு!

லோகா திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கும் அதிகமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலையாளத்தில் ஓ... மேலும் பார்க்க