கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணியினா் உறுதி செய்துள்ளனா்.
மேலும் 4 போ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணியினா் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருகின்றனா். யு-15 பிரிவில் குறைந்தது 25 பதக்கங்களும், யு-17 பிரிவில் குறைந்தது 18 பதக்கங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அரையிறுதிக்கு தகுதி பெறும் அனைவருக்கும் வெண்கலப் பதக்கங்கள் தரப்படுகின்றன.
யு-17 சிறுவா் பிரிவில் அமான் சிவாச் (63 கிலோ), தேவான்ஷ் (80 கிலோ) காலிறுதிச் சுற்றில் பிலிப்பின்ஸ், ஜோா்டான் வீரா்களை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.
மகளிா் பிரிவில் சிம்ரஞ்சித் கௌா் 60 கிலோ) 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜோா்டானின் அல்ஹஸ்சனத்தை வீழ்த்தினாா். 70 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹிமான்ஷி முதல் சுற்றிலேயே பாலஸ்தீனத்தின் ஃபரா லேலாவை வீழ்த்தினாா்.