ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்
ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனா். மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.