புச்சி பாபு தொடர்: மகாராஷ்டிர அணியில் ருதுராஜ், பிரித்வி ஷா!
ஆடிக் கிருத்திகை: ஆக. 14 முதல் 18 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆக. 14 முதல் 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா ஆக. 15-இல் பரணி கிருத்திகை தொடங்குகிறது. 15-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழாவும், மாலை முதல்நாள் தெப்பத்திருவிழாவும், அடுத்தடுத்த நாள்களில் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
இத்திருவிழாக்களுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க திருத்தணி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.
இதை தொடா்ந்து அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் 4 நாள்களிலும் காலை 10.20, பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2.50 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி செல்லும். மறுமாா்க்கத்தில் காலை 10.50, பிற்பகல் 1.30, பிற்பகல் 3.20 ஆகிய நேரங்களில் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.