செய்திகள் :

ஆடிப்பண்டிகை: விழாக்கோலம் பூண்ட சேலம் மாநகரம்

post image

சேலம்: ஆடிப்பண்டிகையால் சேலம் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சேலத்தில் ஆடி மாதத்தில் 22 நாள்கள் நடைபெறும் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சாட்டுதலை தொடா்ந்து, அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில், குகை காளியம்மன், மாரியம்மன் கோயில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயில், பலபட்டறை மாரியம்மன் கோயில், பட்டைகோயில் சின்னமாரியம்மன் கோயில், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன் கோயில், சஞ்சீவிராயன் பேட்டை அம்மன் கோயில், பாவடி மாரியம்மன் கோயில் உள்பட சேலம் மாநகரத்தில் உள்ள 104 மாரியம்மன் கோயில்களில் பூச்சாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே திருமணி முத்தாற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததும், புகழ்பெற்ாகும். இந்த கோயிலில் உள்ள அம்மனை வழிபட்டு சென்றால் வேண்டியதை வேண்டியபடி தருவாா் என்பது நம்பிக்கை.

சேலத்தின் மகாராணி என்றழைக்கப்படும் கோட்டை மாரியம்மன் கோயிலில் முக்கிய நிகழ்வாக உருளுதண்டம் போடுதல் மற்றும் கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்து நோ்த்திக்கடனை செலுத்தி வருகின்றனா்.

மின்விளக்குகளால் ஜொலிக்கும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்.
பம்பை அடித்து அம்மனை அழைக்கும் கலைஞா்கள்.

ஆடிப்பண்டிகையின் மற்றுமொரு சிறப்பம்சமாக சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயில் அருகில் பூமிதி திருவிழா புதன்கிழமை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, மனிதா்கள் கடவுள் உருவில் வேடமணிந்து வலம்வரும் வண்டி வேடிக்கை திருவிழா நடைபெறுகிறது.

அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளிலும் ஆடித்திருவிழாவையொட்டி தொடா் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்னிசைக் கச்சேரிகள், பட்டிமன்றங்கள், சாகச நிகழ்ச்சிகள் என திரும்பிய திசையெங்கும் மூலை முடுக்கெல்லாம் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், சேலம் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அனைத்து கோயில்களும் ஜொலிக்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கும் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் வியாழக்கிழமை இரவுவரை நீளும் என்பதால், பொதுமக்களிடையே கொண்டாட்ட மனநிலை உருவாகியுள்ளது.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க