PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 2 போ் கைது!
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (55). இவா் தனது ஆதரவாளா்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அங்குவந்த சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரைக் கொலை செய்ய முயன்றனா். அவா்களை பிடிக்க முயன்ற 2 பேரை அவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா்.
இதில், கும்பகோணம் அருகே உடையாளூரைச் சோ்ந்த லட்சுமணன், போலீஸாா் விசாரணைக்கு பயந்து திங்கள்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில் இவ்வழக்கில் போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் திருவிடைமருதூா் கீழ தூண்டி விநாயகன்பேட்டையைச் சோ்ந்த பிரபல ரெளடி லாலி மணிகண்டனின் அண்ணன் மகேஷ் மற்றும் இதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.