செய்திகள் :

ஆணவக் கொலை: நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

post image

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கவினின் தோழி சுபாஷினி ஒரு பரபரப்பு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசுகையில்,

"நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். ஆனால் நாங்கள் செட்டில ஆக எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. கடந்த மே 30 ஆம் தேதி கவினும் சுர்ஜித்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். எங்கள் காதலைப் பற்றி சுர்ஜித், அப்பாவிடம் சொல்லிவிட்டான். நீ காதலிக்கிறாயா? என்று அப்பா, என்னிடம் கேட்க நான் 'காதலிக்கவில்லை' என்று கூறிவிட்டேன். ஏனென்றால் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். 6 மாதம் கழித்து வீட்டில் கூற கவின் சொல்லியிருந்தான். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இப்படி ஆகிவிட்டது. கவின், சுர்ஜித்துக்கு இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை.

பெண் பார்க்க வரச் சொல்லி கவினிடம் சுர்ஜித் கூறியிருப்பது மட்டும் எனக்கு தெரியும். அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள்.

நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்து அவன் எடுக்கவில்லை. அதுக்கு அப்புறம்தான் இப்படி நடந்துவிட்டது.

தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்" என்று பேசியுள்ளார்.

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க

427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய... மேலும் பார்க்க

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட... மேலும் பார்க்க