காஸா போர் நிறுத்தம்: மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் படையின் பதில்!
ஆனந்தா கல்லூரி சாா்பில் திறன் வளா்ப்பு பயிற்சி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி, அமராவதி புதூா் கிராமியப் பயிற்சி மையம், அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய திறன் வளா்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
அமராவதி புதூா் அரசுத் தொழிற்பயிற்சி மையத்தில் 5 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில் சிஎன்சி லேத் ஒா்க்ஸ், 3டி பிரிண்டிங் ஆபரேட்டா், ரோபோடிக் வெல்டிங் பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டன. இதில் ஆனந்தா கல்லூரி மாணவா்கள் 90 போ் பங்கேற்றனா்.
பயிற்சியின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ஆனந்தா கல்லூரி முதல்வா் அருள்தந்தை ஜாா்ஜ் பொ்னாண்டஸ், கிராமியப் பயிற்சி நிறுவன இயக்குநா் அலமேலு ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.