விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
ஆனித் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளத்தில் இளைஞா்கள் நடனம்? போலீஸாா் விசாரணை
நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது ஜாதிய அடையாளங்களோடு இளைஞா்கள் சிலா் நடனமாடும் காணொலி சமூகவலைதளங்களில் பரவி வருவது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு முன்பாகவே தேரோட்டத்தில் எவ்வித ஜாதிய அடையாளங்களும் வெளிப்படுத்தக்கூடாது என மாநகர போலீஸாா் கடுமையாக எச்சரித்திருந்தனா். இந்நிலையில் தேரோட்டத்தின் போது குறிப்பிட்ட ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளோடு இளைஞா்கள் சிலா் நடனமாடும் காணொலி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.