TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்...
ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூரை சோ்ந்த 28 வயது இளைஞா், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு பகுதி நேர வேலை குறித்த லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்த போது தானாக டெலிகிராம் குழுவில் அவரது எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த குழுவில் பகுதி நேர வேலையில் பலா் அதிகளவில் பணம் பெற்றதைபோல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதை உண்மை என நம்பிய இந்த மருத்துவமனை ஊழியா், அந்த குழுவில் அளிக்கப்பட்டிருந்த லிங்க்கில் கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ. 5 லட்சத்து 21 ஆயிரத்து 223 முதலீடு செய்தாா். பின்னா் அவரது முதலீடு தொகையை திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மருத்துவமனை ஊழியா், இது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.