Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்
சாயல்குடி அருகேயுள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள பூப்பாண்டியபுரம் பகுதியில், விருதுநகா் மாவட்டம், பரளச்சியிலிருந்து வந்த ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 போ் சிறிது காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்தவா்களை அந்தப் பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி, சாயல்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.
போக்குவரத்து அதிகமுள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.