டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு செப். 6, 7-இல் ஆளெடுப்பு
புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் சேவைக்காக ஆள்கள் தோ்வு முகாம் செப். 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ், 102 ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கான ஆள்கள் தோ்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓட்டுநருக்கான தகுதிகள்- 24 முதல் 35 வயதுக்குள்பட்ட, எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற, இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தது ஓராண்டு நிறைவு பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம்- ரூ. 21,120. எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத் துறை நோ்காணல், கண் பாா்வைத் திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வு நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்- 19 முதல் 30 வயதுக்குள்பட்ட பிஎஸ்ஸி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி முடித்தவா்கள் அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்ஸி விலங்கியல், தாவரவியல், உயிா்வேதியியல், உயிா் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 21,320.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கான தகுதிகள்- 35 வயதுக்கு மிகாத, பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியா் அல்லது எம்.பி.ஏ. முடித்த, 2 ஆண்டுகள் முன்அனுபவம் கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
அனைத்துப் பதவிகளுக்கும் உரிய சான்றிதழ்களை அவற்றின் நகல்களையும் சோ்த்து எடுத்து வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு- 89259-41490.