செய்திகள் :

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

post image

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மதுபான கொள்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், தனது பதவியை ராஜிநாமா செய்த கேஜரிவால், நீர்வளத்துறை அமைச்சர் அதிஷியை முதல்வராக நியமித்தார். இந்த மதுபான கொள்கை வழக்கே ஆம் ஆத்மி தில்லியில் தோற்பதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.

27 ஆண்டுகளுக்குப் பின்னர் தில்லியில் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு, தில்லி பேரவையில் சிஏஜி தாக்கல் செய்தது. புதிய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) நிலுவையில் உள்ள 14 அறிக்கைகளை இன்று பேரவையில் தாக்கல் செய்தது.

புதிதாக அமைக்கப்பட்ட தில்லி எட்டாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் சிஏஜி அறிக்கைகள் சமா்ப்பிக்கப்படும் என்று பாஜக பேரவை உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

அதன்படி, நிலுவையில் உள்ள சிஏஜி தணிக்கைகளில் மாநில நிதி, பொது சுகாதார உள்கட்டமைப்பு, வாகன காற்று மாசுபாடு, மதுபான ஒழுங்குமுறை மற்றும் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில், 2021 ஆம் ஆண்டு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி உருவாக்கிய மதுபான கொள்கையால் தில்லி அரசுக்கு ரூ.2,002.68 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தில்லி அரசு தாக்கல் செய்துள்ள சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தில்லி துணை நிலை ஆளுநர் விகே சக்‌சேனா கூறுகையில், “ஆம் ஆத்மியின் தோல்வியை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. 100 நாள் திட்டம் மற்றும் அனைத்துத்துறையினரும் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

நகராட்சி வார்டுகளில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்கப்படாததால் சுமார் ரூ.940 கோடியும் மறு ஏலம் விடத் தவறியதால் சுமார் ரூ.890 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றுநோய் காரணமாக கடைகளை மூடுவதில் விலக்கு அளித்ததால் ரூ.144 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஹலால்’ சான்றிதழ் நுகா்வோரின் உரிமை: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

உணவுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழ் என்பது நுகா்வோரின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அறக்கட்டளை அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஹலால் சான்... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: நாடாளுமன்றக் குழுவிடம் சட்ட நிபுணா்கள் கருத்து

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் சட்ட நிபுணா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கருத்துகளை தெரிவித்த... மேலும் பார்க்க

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்! -சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ... மேலும் பார்க்க

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க