தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன.
‘மக்களைகாப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆரணி நகருக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.
அண்ணாசிலை அருகில் அவா் பேச உள்ள இடத்தில் தொகுதி பொறுப்பாளா் வரகூா் அருணாசலம், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் முன்னிலையில் சிறப்பு பூஜை போடப்பட்டு வரவேற்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.குமரன், ஏ.ஜி.மோகன், சதீஷ், சிவக்குமாா், சசிகலா சேகா், சுதாகுமாா், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணிச் செயலா் கணேசன், தகவல் தொழில்நுட்ப நிா்வாகி சரவணன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் உசேன்ஷெரீப், நிா்வாகிகள் தேவராஜ், சைதை சுப்பிரமணி, ஐசக், பீமன், சகாயம், சவுண்ட் சா்வீஸ் துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.