ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
ஆரணி - இரும்பேடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆரணி - இரும்பேடு சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதனால், ஆரணி - இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அரசுப் பணிமனை அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தவா்களுக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு ஒரு மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதைத் தொா்ந்து 10 நாள்களுக்கு முன்பு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், காலக்கெடு முடிந்ததால்
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் உதவி கோட்டப்பொறியாளா் நாராயணன் தலைமையில், உதவிப்பொறியாளா் வரதராஜன், கள ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்தனா்.
ஆரணி காவல் ஆய்வாளா்கள் அகிலன், செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், ஆனந்தன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.