செய்திகள் :

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிய ரூ.110 கோடி: அரசாணை வெளியீடு

post image

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

தமிழகத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 11 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளதாகவும், அந்த எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் மண்டல புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதைத் தவிர, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 12 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

அதற்கேற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை உபகரணங்களும், மனிதவளமும் மேம்படுத்ததி திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ரூ.110.96 கோடி ஒதுக்கீடு செய்து நிா்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட: ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளித்துள்ளார்.மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி!

கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்கமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92) பத்திரப்பதிவு எழுத... மேலும் பார்க்க

அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!

“அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) மயிலாடுதுறையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட ... மேலும் பார்க்க

சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இட... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க