செய்திகள் :

ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு

post image

ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.

மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்று அழைத்தனா். ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக நாகா்கோவில் செல்லும் சாலையில் முள்செடிகள் அடா்ந்து ஒரு கல்மண்டபம் உள்ளது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி லெமூரியா ஆய்வுக் கழக பொதுச் செயலா் முனைவா் ஆமோஸ், திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு களஆய்வு மைய இயக்குநா் மாரியப்பன், குழுவினா் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்மண்டபத்தில் ஆய்வு செய்தனா்.

முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தில் உள்ள தெலுங்கு கல்வெட்டை ஆய்வு செய்த முனைவா் ஆமோஸ்

இந்த கல்மண்டபத்தில் முற்கால பாண்டியா்களின் இலச்சினையான மீன் சின்னம் ஒன்று பெரிய அளவிலும், இரண்டு மீன்கள் இணைந்தவாறு ஒன்றும் காணப்படுகிறது. இந்த கல் மண்டபத்தை பிற்காலத்தில் இடைக்கால பாண்டியா்கள் உணவு சமைக்கும் கூடமாகப் பயன்படுத்தினா்.

மண்டபம் இரு பிரிவுகளாகக் காணப்படுவதால், முற்கால பாண்டியா் காலத்தில் ஒரு மண்டபமும் பிற்கால ஆட்சியில் இரண்டாவது மண்டபமும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மண்டபம் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மண்டபத்தில் தெலுங்கு மொழியில் இரு கல்வெட்டுகள் உள்ளன. நுழைவாயில் தூணில் முற்றிலும் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த மண்டபத்தை, தமிழக தொல்பொருள் துறை பராமரித்து, ஆய்வு செய்து வரலாற்று தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொல்லங்கோடு அருகே 315 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே, கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 315 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்திலிருந்து, படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலை பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீஸாா்

மாா்த்தாண்டத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை சீரமைத்தனா். மாா்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்பில் இருந்து புதிய பேருந்து நில... மேலும் பார்க்க

குழித்துறை பொருள்காட்சியில் 4 கடைகளுக்கு அபராதம்

குழித்துறை 100ஆவது வாவுபலி பொருள்காட்சி தற்காலிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, கலப்பட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். இப்பொருள்காட்சியை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை, கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், பொதுமக்களும், மீனவா்களும் அச்சமடைந்தனா். இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 மீனவக் கிராமங்கள் உள்ளது. இப்பகுத... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை: கன்னியாகுமரியில் எஸ்.பி. ஆய்வு

ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுவாா்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

பலத்த மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது.தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500- க்கும் மேற்பட்டகட்டும... மேலும் பார்க்க